» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில் பஜார்களில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் - மாநகராட்சி நடவடிக்கை

செவ்வாய் 9, பிப்ரவரி 2021 11:40:51 AM (IST)நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். 

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரோட்டோர கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மூலம் அவ்வப்போது அகற்றி வருகின்றனர். இந்நிலையில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சிக்கு புகார் வந்தது. மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் ஆலோசனைப்படி வெட்டூர்ணிமடம் சந்திப்பில் இருந்த ஒரு கடையையும், நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் இருந்த தற்காலிக கடைகள் 5 கடைகளையும் நகரமைப்பு அலுவலர்கள் அகற்றினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory