» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரியும் - முதல்வர் மீது மு.க.ஸ்டாலின் தாக்கு

சனி 6, பிப்ரவரி 2021 3:33:20 PM (IST)

அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பது போல முதல்வர் செயல்பட்டு வருகிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 29 ஆம் தேதி முதல் "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.  இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. ஊழல் ஆணையமாக மாறி உள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், " பிற மாநிலத்தவரை இறக்குமதி செய்யும் ஆணையமாக டி.என்.பி.எஸ்.சி. செயல்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி. மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

டி.என்.பி.எஸ்.சி. ஊழல் வழக்கில் கார் ஓட்டுநர்கள் உள்ளிட்ட சாதாரண பணிகளில் உள்ளவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.  டி.என்.பி.எஸ்.சி. ஊழலில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்.  25 ஆண்டுகால கட்சிப் பணிகளுக்கு பிறகே சட்டமன்றம் சென்றேன். முதல்வர் இன்னும் பல அறிவிப்புகளை வெளியிடுவார்; ஆனால் விவசாயிகள், மக்கள் ஏற்க மாட்டார்கள். அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பது போல முதல்வர் செயல்பட்டு வருகிறார். முதல்வர் பேச்சை அமைச்சர்கள் கேட்பதில்லை. தமிழகத்தில் அரைகுறை ஆட்சி நடக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory