» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மண்டைக்காடு தாக்குதல் சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது : பொன். இராதாகிருஷ்ணன்

சனி 6, பிப்ரவரி 2021 8:49:53 AM (IST)

மண்டைக்காடு தாக்குதல் சம்பவத்திற்கு முன்னாள் மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட  அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த ஜாதி மத மோதல்கள் நீங்கி அமைதி திரும்பிவரும் நிலையில் மண்டைக்காடு பகுதியில் 31/01/2021 அன்று நிகழ்ந்த தாக்குதல் சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறை இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆரம்பத்திலேயே அதிகாரிகளிடம் கூறியபின்பும் தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்படாதது கண்டிக்கத்தக்கது.

காவல்துறை இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை உடனே கைது செய்து அவர்களுக்கு தண்டனை பெற்று தரவேண்டும் என்பதுடன், மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory