» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சிகரெட் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு

சனி 6, பிப்ரவரி 2021 8:41:23 AM (IST)

தக்கலை அருகே சிகரெட் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் மர்ம நபர்கள் நகை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தக்கலை அருகே புலியூர்குறிச்சி தோப்பு பகுதியை சேர்ந்தவர் பயஸ், விவசாயி. இவரது மனைவி விஜயா (47). இவர் புலியூர்குறிச்சி பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 9 மணியளவில் விஜயா கடையில் இருந்த போது மோட்டார் சைக்கிளில் இரண்டு மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் கடையின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பின்னால் இந்த நபர் இறங்கி விஜயாவிடம் சென்று சிகரெட் வேண்டும் என கேட்டார். அவர் சிகரெட் எடுப்பதற்காக திரும்பிய போது அவரது கழுத்தில் கிடந்த 5½ பவுன் தங்க சங்கிலியை பறித்தான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயா சத்தம் போட்ட நிலையில் நகையை காப்பாற்ற கொள்ளையனிடம் போராடினார். ஆனால், அந்த நபர் அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி கூட்டாளியுடன் தப்பி சென்றான். இதுகுறித்து தக்கலை போலீசுக்கு தகவல் ெகாடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அதை கைப்பற்றிய போலீசார் மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். சிகரெட் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் நகை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory