» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

காதல் கணவர் இறந்த துக்கத்தில் புதுப்பெண் தற்கொலை : திருமணமான 8 மாதத்தில் சோகம்

சனி 6, பிப்ரவரி 2021 8:38:14 AM (IST)

அருமனை அருகே திருமணமான 8 மாதத்தில், காதல் கணவர் இறந்ததால், துக்கம் தாங்காமல் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குமரி மாவட்டம், அருமனை அருகே அம்பலகடையில் வசித்து வருபவர் உஷா. இவருடைய மகள் அபிஷா (வயது 19). இவர் மார்த்தாண்டம் அருகே ஒரு கல்லூரியில் படித்து வந்தார். அப்போது குலசேகரம் அருகே செருப்பாலூர் என்ற இடத்தை சேர்ந்த விஜயகுமார் மகன் சிவா என்பவரை காதலித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டார். சில மாதங்கள் சந்தோஷமாக வாழ்ந்த தம்பதிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த டிசம்பர் மாதம் சிவா தற்கொலை செய்து கொண்டார்.

அதன்பிறகு அபிஷா தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார். ஆசை, ஆசையாக காதலித்து திருமணம் செய்த கணவரை இழந்த சோகத்தில் அவர் இருந்து வந்தார். இந்தநிலையில் துக்கம் தாங்காமல் அபிஷா தாய் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தாய் உஷா அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் தற்கொலை என்ற விபரீத முடிவை தேடி கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory