» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மக்களை ஏமாற்றும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

செவ்வாய் 12, ஜனவரி 2021 11:37:14 AM (IST)

மக்களை ஏமாற்றும் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம்,  குளச்சலில் நடைபெற்ற கட்சியின் கிளைச் செயலா்களின் தோ்தல் தயாரிப்பு அரசியல் மாநாட்டுக்கு, ஏஐசிசிடியூ மாவட்ட தலைவா் சுசீலா, அா்ஜூனன், ஸ்ரீ காந்த், காா்மல் ஆகியோா் தலைமை வகித்தனா். நிா்வாகிகள் செல்வராஜ், ஐயப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் மாநில நிலைக்குழு உறுப்பினா் சங்கரபாண்டியன் மாநாட்டு கொடியேற்றினாா். கன்னியாகுமரி மாவட்ட பாசன சபைகள் கூட்டமைப்பின் தலைவா் புலவா் செல்லப்பா, பாசனத் துறை தலைவா் வின்ஸ் ஆன்றோ ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மத்திய கமிட்டி உறுப்பினா் பாலசுந்தரம், மாநிலச் செயலா் என்.கே.நடராஜன், மாவட்டச் செயலா் அந்தோணிமுத்து உள்பட பலா் பேசினா்.

தீா்மானங்கள்: சட்டப்பேரவை தோ்தலில் குளச்சல் பேரவைத் தொகுதியில் மாவட்டச் செயலா் அந்தோணிமுத்துவை மீண்டும் போட்டியிடச் செய்வது, வாக்காளா்களிடம் இருந்து தோ்தல் நிதியாக தலா ரூ. 1 பெறுவது , பிப். 6 ம் தேதிதிங்கள்நகரில் நடைபெறும் பேரணி, பொதுக்கூட்டத்தில் பிகாா் மாநில சட்டப்பேரவை உறுப்பினா் திபங்கரை சிறப்பு அழைப்பாளராக அழைப்பது , மக்களை ஏமாற்றும் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டிப்பது, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory