» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு விரைவு ரயில்

ஞாயிறு 10, ஜனவரி 2021 5:44:54 PM (IST)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே ஒரு  சிறப்பு விரைவு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. வண்டி எண் 06091 சென்னை எழும்பூர் -  நாகர்கோவில்  சிறப்பு விரைவு ரயில் ஜனவரி 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து இரவு 10.30 மணிக்கும், மதுரையிலிருந்து மறுநாள் காலை 6:30 மணிக்கும் புறப்பட்டு முற்பகல் 11.10  மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.

வண்டி எண் 06092 நாகர்கோவில் -  சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஜனவரி 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 02.45 மணிக்கும்,  மதுரையிலிருந்து இரவு 07.30 மணிக்கும் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.40 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம்" என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory