» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரியில் கடைகளில் தீவிபத்து: ரூ. பல லட்சம் சேதம் - பொன் ராதாகிருஷ்ணன் ஆய்வு!!

சனி 9, ஜனவரி 2021 12:27:54 PM (IST)கன்னியாகுமரியில் 70 மேற்பட்ட கடைகள் தீவிபத்தில் எரிந்து சாம்பல் ஆகியது. பல லட்ச ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் பகுதியில் நூற்றுக்கும் மேலான வியாபாரக் கடைகள் இயங்கி வருகிறது.  இங்கு சங்கு பாசி மற்றும் கைத்தறி ஆடைகள் ஜவுளிகள் பிளாஸ்டிக் ஃபேன்ஸி பொருட்கள் உணவகங்கள் இயங்கி வருகின்றன. திடீரென தீ பிடித்து 70 மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பல் ஆகியது. 

இதனால் பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.தீ மேலும் பரவாமல் தடுக்க தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடினர். கரோனா தாக்கம் காரணமாக பல மாதங்கள் முடங்கி கிடந்தது.தற்போது சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில்  ஏராளமான கடைகள் தீக்கிரையானது வியாபாரிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தீவிபத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory