» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில் - மும்பை சிறப்பு ரயில் & தேஜாஸ் சிறப்பு ரயில் நேரம் மாற்றம்

வெள்ளி 27, நவம்பர் 2020 5:16:59 PM (IST)

நாகர்கோவில் - மும்பை சிறப்பு ரயில் மற்றும் தேஜாஸ் சிறப்பு ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டு, ரயில்கள் நின்று் செல்லும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு : மதுரை வழியாக நாகர்கோவில் - மும்பை  நகரங்களுக்கு இடையே வாரம் நான்கு முறை சேவை சிறப்பு ரயில்கள் டிசம்பர் முதல் வாரத்தில் இயக்கப்பட இருக்கிறது. 

வண்டி எண் 06340 நாகர்கோவில் - மும்பை சிறப்பு ரயில் 07.12.2020 முதல் திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து காலை 06.00 மணிக்கு புறப்பட்டு, மதுரையிலிருந்து முற்பகல் 11.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 07.15 மணிக்கு மும்பை சென்று சேரும். 

மறுமார்க்கத்தில் வண்டி எண் 06339 மும்பை - நாகர்கோவில் சிறப்பு ரயில் 08.12.2020 முதல் செவ்வாய், புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 08.35 மணிக்கு புறப்பட்டு வியாழன், வெள்ளி, சனி மற்றும் திங்கள் கிழமைகளில்  காலை 10.20 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். 

இந்த ரயில்கள் வள்ளியூர், நாங்குநேரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், திருப்பத்தூர், காட்பாடி, சித்தூர், மதனப்பள்ளி ரோடு, கதிரி, தர்மாவரம், அனந்தப்பூர், குண்டக்கல், அடோனி, மந்த்ராலயம் ரோடு, ரெய்ச்சூர், யாட்கிர்,  கலபுரகி, சோலாப்பூர், குர்ட்வாடி, டான்ட், புனே, கல்யாண், தானே, தாதர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டுக்கு படுக்கை வசதி பெட்டி, நான்கு குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், பத்து இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், இரண்டு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், ஒரு சமையல் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். வண்டி எண் 06340 மும்பை சிறப்பு ரயில் நாமக்கல் ரயில் நிலையத்திலும், வண்டி எண் 06339 நாகர்கோவில் சிறப்பு ரயில் மகாராஷ்டிர மாநிலம் கர்ஜாட் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்

சென்னை - மதுரை தேஜாஸ் சிறப்பு ரயில் 

04.12.2020 முதல் சென்னை - மதுரை தேஜாஸ் சிறப்பு ரயில் சென்னையிலிருந்து புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வண்டி எண் 02613 சென்னை - மதுரை தேஜாஸ் சிறப்பு ரயில் சென்னை எழும்பூரில் இருந்து தற்போதைய காலை 06.30 மணிக்கு பதிலாக காலை 06.00 மணிக்கே புறப்பட்டு, திருச்சியில் இருந்து 10 மணிக்கும், கொடைக்கானல் ரோட்டில் இருந்து 11.20 மணிக்கும் புறப்பட்டு நண்பகல் 12.20 மணிக்கு மதுரை வந்து சேரும். 

மறுமார்க்கத்தில் 04.12.2020 முதல் வண்டி எண் 02614 மதுரை சென்னை தேஜாஸ் சிறப்பு ரயில் தற்போதைய மாலை 03.15 மணிக்கு பதிலாக மாலை 03.00 மணிக்கே புறப்பட்டு, கொடைக்கானல் ரோட்டில் இருந்து மாலை 03.30 மணிக்கும், திருச்சியிலிருந்து மாலை 05.05 மணிக்கும் புறப்பட்டு இரவு 09.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில்கள் திருச்சி மற்றும் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.


மக்கள் கருத்து

MAKKALNov 27, 2020 - 07:03:54 PM | Posted IP 162.1*****

MADURAI-CHENNAI TEJAS IS VERY GOOD

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:10:08 AM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory