» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில் அருகே எம்பி வீட்டின் முன்பு வெடிகுண்டு : போலீசார் தீவிர விசாரணை - பரபரப்பு

செவ்வாய் 24, நவம்பர் 2020 3:32:36 PM (IST)நாகர்கோவில் அருகே எம் பி விஜயகுமார் வீட்டில் வெடி குண்டு கிடந்ததை ஒட்டி போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் பகுதியில் மேல்சபை எம்பி விஜயகுமார் வசித்து வருகிறார். இவர் அதிமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். இவருடைய வீட்டின் முன்பு சம்பவத்தன்று வெடி குண்டு இருந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மோப்ப நாய், வெடி குண்டு நிபுணர்கள், மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிரமாக சோதனை செய்தனர்.

போலீசார் வெடி குண்டை கைப்பற்றி வெடி குண்டு குறித்து அதன் தன்மையை ஆய்வு செய்து வருகின்றனர். போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசியல் போட்டியோ அல்லது முன்விரோதம் காரணமாக யாராவது செய்திருப்பார்களா என்றும் தீவிரமாக விசாரணையை நடத்தி வருகின்றனர்.   முதல்கட்டமாக கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.  எம் பி வீட்டின் முன்பு வீசப்பட்ட  வெடி குண்டால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory