» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆன்லைனில் போலி கணக்குகள் தொடங்கி ரயில் டிக்கெட் விற்ற ஏஜென்சி உரிமையாளர் கைது!

செவ்வாய் 24, நவம்பர் 2020 12:11:49 PM (IST)

தக்கலை அருகே ஆன்லைனில் போலி கணக்குகள் தொடங்கி ரயில்வே டிக்கெட்டை விற்ற டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர் கைது செய்யப்பட்டார். 

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே பருத்தி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மரிய கிளாட்சன் (44), இவர் அழகியமண்டபம் பகுதியில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். இங்கு ரயில், பஸ், விமான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்து விற்று வருகிறார். இவரது ஏஜென்சியில் சட்டவிரோதமாக ஆன்லைனில் போலி கணக்குகள் தொடங்கி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதாக நாகர்கோவில் ரயில்வே மத்திய பாதுகாப்பு படை போலீசாருக்கு புகார் வந்தது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உபேந்திரகுமார் தலைமையில் ரயில்வே போலீசார் அந்த ஏஜென்சியில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அங்கிருந்த 2 கணினிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, அதில் ஆன்லைனில் பல்வேறு போலி கணக்குகள் தொடங்கி, அதன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்றதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து போலீசார், ஏஜென்சி உரிமையாளர் மரிய கிளாட்சனை கைது செய்தனர். மேலும் அங்கு சட்டவிரோதமாக முன்பதிவு செய்து விற்பனைக்காக வைத்திருந்ததாக 21 ரயில்வே முன்பதிவு டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory