» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவிலில் சாலைகளை சீரமைக்கக்கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம்
வெள்ளி 20, நவம்பர் 2020 4:45:12 PM (IST)
நாகர்கோவிலில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி நாகர்கோவிலில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகர்கோவிலில் பாதாள சாக்கடை பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு சரியாக மூடவில்லை. இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில் சேதமடைந்த சாலைகளை உடனே சீரமைக்கக்கோரி நேற்று தி.மு.க. சார்பில் மீனாட்சிபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது.: நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட மாநில சாலைகள், தேசிய சாலைகள் போக்குவரத்துக்கு பயன்படாத வகையில் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. தற்போது மழை காலம் என்பதால் சேதமடைந்த சாலைகளில் வாகனங்களை ஓட்டுவதில் மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்படுகின்றன. இப்படி மக்கள் அவதிப்படுவதை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி தி.மு.க. சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இனியும் மாநகராட்சி நிர்வாகம் சாலைகளை செப்பனிடாவிட்டால், வருகிற 23-ந் தேதி டெரிக் சந்திப்பிலும், 25-ந் தேதி செட்டிகுளம் சந்திப்பிலும், 28-ந் தேதி வடசேரி கிருஷ்ணன்கோவில் சந்திப்பிலும் எனது தலைமையில் போராட்டம் நடத்தப்படும். மேலும் 30-ந் தேதியன்று தலைமை தபால் நிலையம் முன்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கூறினார்.ஆர்ப்பாட்டத்தில் மாநகர செயலாளர் மகேஷ், அணி அமைப்பாளர்கள் ராஜன், சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் மழை நீடிப்பு- பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 3:49:18 PM (IST)

கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றம் : சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:13:09 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:10:08 AM (IST)

நகை பட்டறையில் 37½ பவுன், ரூ.1¼ லட்சம் கொள்ளை : மாயமான ஊழியருக்கு வலைவீச்சு
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:01:14 AM (IST)

நாகா்கோவிலில் விபத்து: மருத்துவா், செவிலியா் பலி
வெள்ளி 9, ஏப்ரல் 2021 10:22:44 AM (IST)

குமரியில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் அறைக்கு சீல்வைப்பு ஆட்சியர் மா.அரவிந்த், தகவல்
புதன் 7, ஏப்ரல் 2021 5:15:04 PM (IST)
