» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10½ ஆண்டு சிறை - நீதிமன்றம் தீர்ப்பு

வியாழன் 19, நவம்பர் 2020 5:49:14 PM (IST)

நாகர்கோவில் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10½ ஆண்டு சிறை தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

நாகர்கோவில் அருகே உள்ள மாதவாலாயம் பகுதியை சாரந்தவர் அப்துல்லா (59) இவரது பக்கத்துவீட்டில் வெளியூரில் இருந்து 11,10, 9 ஆகிய வயதுடைய மூன்று சிறுமிகள் வந்திருந்தனர். கடந்த 2017 வருடம் ஏப்ரல் மாதம் சிறுமிகளை அப்துல்லா அவரின் வீட்டிற்க்கு அருகே அவருக்கு சொந்தமான தோட்டத்திறக்கு சாக்லேட் தருவதாக கூறி அச்சிறுமிகளை அழைத்துசென்று பாலியல் வன்புனர்வு செய்துள்ளார். அக்குழந்தைகள் நடந்த சம்பவத்தை உறவினகர்களிடம் சொல்ல அவர்கள் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர் 

புகார் தொடர்பாக இன்ஸ்பெக்டர் கண்மனி வழக்குபதிவு செய்து அப்துல்லாவை கைது செய்துள்ளார். அதன்பிறகு இந்த புகார் தொடர்பான வழக்கு நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில் நேற்று நீதிபதி எழில் வேலவன் சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்த அப்துல்லாவிற்க்கு பத்தரை ஆண்டு சிறை தண்டனையும் மேலும் 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு எதிர்கால வாழ்வு நிதியாக தலா ரூ.5 லட்சம் வீதம் மாவட்ட ஆட்சியர் வழங்கவேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory