» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் குண்டும் குழியுமாக சாலைகள் : விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

வியாழன் 19, நவம்பர் 2020 5:03:53 PM (IST)தூத்துக்குடியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்படுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். 

தூத்துக்குடியில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகரை அழகுப்படுத்தும் பணிக்கும் பூங்காக்களை அமைக்கும் பணிக்கும் கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது. ஆனால், சாலை வசதிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. கடந்த சில மாதங்களாக தூத்துக்குடியில் பல்வேறு சாலைகள் கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பதற்காகவும், பல்வேறு தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்காகவும், மின்வாரிய பணிக்காகவும் தோண்டப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் பலத்த மழையால் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க நேரிடுகிறது. அண்ணாநகர் மெயின் ரோடு, குறிஞ்சி நகர் மெயின் ரோடு, பிரையண்ட் நகர், ஜார்ஜ் ரோடு பீங்கான் ஆபீஸ் சந்திப்பு, புதுக்கிராமம் மெயின் ரோடு, காமராஜர் சாலை, உள்ளிட்ட பல்வேறு பிரதான சாலைகள் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் படு மோசமாக உள்ளது. எதிரில் வாகனங்கள் வந்தோலோ, அருகில் வருகிற வாகனங்களை திரும்பி பார்ப்பதற்குள் குழியில் சிக்கி பலர் காயம் அடை்ய நேரிடுகிறது. எனவே உயிர் பலி ஏற்படும் முன் சாலைகளில் உள்ள குழிகளை தற்காலிகமாக சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

மக்கள்Nov 19, 2020 - 09:20:49 PM | Posted IP 162.1*****

மாநகராட்சி தான் சரியில்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory