» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் அழைப்பு

புதன் 18, நவம்பர் 2020 4:45:50 PM (IST)

குமரி மாவட்டத்தில் துணிச்சலான செயல்கள் செய்த அரசு ஊழியர்கள் அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அழைப்பு விடுத்துள்ளார்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆபத்துக் காலங்களில் உயிர்களை காப்பாற்றுதல், திருடர்களிடமிருந்து உடைமைகளை காப்பாற்றுதல் போன்ற துணிச்சலான செயல்களைச் செய்த அரசு ஊழியர்களுக்கு அண்ணா பதக்கம் 2021 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் முதலமைச்சரால்  வழங்கப்பட உள்ளது. 

இந்த பதக்கத்துக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தாங்கள் செய்த துணிச்சலான செயல் குறித்த விபரத்தை இணைக்கவேண்டும். http://awards.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் டிசம்பர் 14ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory