» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி உட்பட 8 மாவட்டங்களில் கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்

செவ்வாய் 17, நவம்பர் 2020 4:37:28 PM (IST)

தமிழகத்தில் , கன்னியாகுமரி உட்பட 8 மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, நெல்லை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது.

தென் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.சென்னை நகர், புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு லேசான மழையே பெய்யும்.குமரிக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு, அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:10:08 AM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory