» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வீட்டின் முன் பட்டாசு வெடித்ததை கண்டித்த தம்பதி மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு

திங்கள் 16, நவம்பர் 2020 5:48:21 PM (IST)

வெள்ளிச்சந்தை அருகே வீட்டின் முன் பட்டாசு வெடித்ததை கண்டித்த இஞ்ஜினீயர் மற்றும் அவரது மனைவியை தாக்கிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை அருகே பெரும்செல்வ விளையை சேர்ந்தவர் சிவகுமார்(46). மரைன் இன்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த மனோஜ், பி.அஜீத், நிதீஷ், முத்துகிருஷ்ணன் மற்றொரு எம்.அஜுத் ஆகியோர் செல்வகுமாரின் வீட்டு முன் பட்டாசு வெடித்துள்ளனர். இதை சிவகுமார் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த மனோஜ் தரப்பினர் சிவகுமாரிடம் தகராறு செய்து அவரை தாக்கினர். 

இதை தடுக்க வந்த அவரது மனைவியையும் அவர்கள் தாக்கி மிரட்டல் விடுத்து சென்றனர். இதில் படுகாயமடைந்த சிவகுமார் ராஜாக்கமங்கலத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில்,  மனோஜ், பி.அஜீத் உள்ளிட்ட 5 பேர் மீது வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory