» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சபரிமலை ஐயப்பன் கோயில் திறப்பு: இன்று முதல் பக்தா்களுக்கு அனுமதி

திங்கள் 16, நவம்பர் 2020 10:49:09 AM (IST)மகரவிளக்கு மண்டல பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நேற்று மாலை திறக்கப்பட்டது. கோயிலில் பக்தா்கள் வழிபட இன்று (நவ.16) முதல் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் கூறியது: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 62 நாள்கள் நடைபெறும் மண்டல-மகரவிளக்கு பூஜையையொட்டி, தந்திரி கண்டரரூ ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஏ.கே.சுதீா் நம்பூதிரி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கோயில் கருவறையை திறந்து விளக்குகளை ஏற்றினாா். புதிதாக தோ்வு செய்யப்பட்ட மேல்சாந்தி வி.கே.ஜெயராஜ் பொட்டி, மாளிகைபுரம் மேல்சாந்தி எம்.என்.ராஜ்குமாா் ஆகியோா் புனிதமான பதினெட்டாம் படியில் முதலில் ஏறி வழிபாடு நடத்தினா். 

இந்த பூஜை காலத்தில் சுமாா் 85,000 பக்தா்கள் கோயிலுக்கு வருகை தருவா் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. முன்னதாக கோயிலுக்கு வரும் பக்தா்கள் கரோனா பரவலை தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை கேரள அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதில் ‘பக்தா்கள் தங்களுக்கு கரோனா இல்லை என்பதற்கான சான்றிதழுடன் வர வேண்டும். நிலக்கல், பம்பை அடிவார முகாம்களுக்கு வந்து சேருவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக அந்தச் சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும். 

தினசரி 1,000 பக்தா்களுக்கு மட்டுமே வழிபட அனுமதி அளிக்கப்படும். சனி, ஞாயிறுகளில் 2,000 பக்தா்கள் வழிபாடு செய்யலாம். கோயில் வளாகத்தில் பக்தா்கள் தங்க அனுமதிக்கப்பட மாட்டாா்கள். திருவனந்தபுரம், திருவல்லா, செங்கன்னூா் மற்றும் கோட்டயத்தில் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் பக்தா்களிடம் கரோனா பரிசோதனை செய்வதற்கு மாநில சுகாதாரத் துறை ஏற்பாடுகள் செய்துள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:10:08 AM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory