» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

லேப்-டாப்பில் சிக்கிய ஆபாச வீடியோக்கள் : நாகர்கோவில் காசிக்கு மேலும் சிக்கல்

வெள்ளி 13, நவம்பர் 2020 8:19:44 AM (IST)

பல பெண்களை சீரழித்த காசியின் லேப்-டாப்பில் இருந்து மீட்கப்பட்ட வீடியோக்களில் பல ஆபாச காட்சிகள் சிக்கின. இதுதொடர்பாக காசியின் கூட்டாளிகள் மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி (27). இவர் மீது பெண்கள் அளித்த புகாரின்பேரில், 6 பாலியல் வழக்குகள் மற்றும் ஒரு கந்துவட்டி வழக்கு பதிவு செய்யப்பட்டது. காசி மீது கடைசியாக சென்னை மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில், அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று முன்தினம் மீண்டும் ஜெயிலில் அடைத்தனர்.

போலீஸ் காவலில் காசி இருந்தபோது சி.பி.சி.ஐ.டி. போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. மாணவியுடன் காரில் உல்லாசம் அனுபவித்த காசி, மாணவிக்கே தெரியாமல் அதை வீடியோ எடுத்ததும், பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறித்ததோடு மாணவியை பல முறை தன் ஆசைக்கு இணங்க வைத்ததும் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே காசியின் லேப் டாப் மற்றும் செல்போன்களில் அழிக்கப்பட்டு இருந்த ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சைபர் கிரைம் போலீசார் நவீன தொழில்நுட்பம் மூலம் ஹார்டு டிஸ்க்கில் இருந்து மீட்டுள்ளனர். அதில் ஆயிரத்துக்கும் அதிகமான ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்தது. மீட்கப்பட்டவற்றில் காசி பெண்களுடன் உல்லாசம் அனுபவித்த ஆபாச வீடியோக்களும், பல பெண்களுடன் காசி வீடியோ கால் செய்து பேசும்போது, அவர் கூறியதின் பேரில் ஆடைகளை கழற்றி காண்பித்த ஆபாச வீடியோக்களும் ஆகும். அந்த ஆபாச வீடியோ காட்சிகள் ஒவ்வொன்றையும் போலீசார், காசியிடம் காண்பித்து ஒவ்வொரு பெண்ணின் பெயர், முகவரி போன்ற விவரங்களை கேட்டு பெற்றனர்.

அப்போது குமரி, நெல்லை, கடலூர், சென்னை, மும்பை, பெங்களூரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த டாக்டர்கள், பேராசிரியைகள், விரிவுரையாளர்கள், கல்லூரி மாணவிகள், ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், குடும்ப பெண்கள், பேன்சி கடைகள் மற்றும் மொபைல் கடைகளில் பணிபுரியும் பெண்கள், உறவினர் பெண்கள் என ஒவ்வொருவரையும் அடையாளம் காட்டியுள்ளார். அவர்களுடைய செல்போன் எண்களையும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அவர்களை காசி தனது காதல் வலையில் வீழ்த்தி, ஆசைக்கு இணங்க வைத்து, ரகசியமாக வீடியோ எடுத்து, பின்னர் அதனை காண்பித்து மிரட்டி பணம் பறித்துள்ளார்.

காசியால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் தற்போது திருமணமாகி விட்டதால், குடும்ப கவுரவம் பாதிக்கப்படும் என்று கருதி புகார் தெரிவிக்காமல் இருந்து வருகின்றனர். இதற்கிடையே லேப்டாப்பில் அழிக்கப்பட்ட வீடியோக்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீட்டதால், அதிர்ச்சி அடைந்த காசி தன்னை விட்டு விடுமாறும், தன் மீது மேலும் வழக்குகள் பதிவு செய்ய வேண்டாம் என்று போலீசாரிடம் கெஞ்சியதாக போலீசார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory