» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

காசியின் செல்போன்களில் இருந்து அழிக்கப்பட்ட 800க்கும் மேற்பட்ட ஆபாச படங்கள் மீட்பு

புதன் 11, நவம்பர் 2020 4:03:36 PM (IST)நாகர்கோவில் காசியின் லேப்டாப் மற்றும் செல்போன்களில் இருந்து அழிக்கப்பட்ட 800க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை சிபிசிஐடி போலீசார் மீட்டுள்ளனர்.

சமூக வலைதளங்களில் உள்ள பெண்களிடம் நட்பாக பழகி அவர்களை காதலிப்பது போல் நடித்து கடைசியில் அவர்களின் வாழ்க்கையில் விளையாடிய நாகர்கோவில் காசி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே காசி மீது ஐந்து பெண்கள் புகார் கொடுத்துள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காசி மீது புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் காசியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  காசியின் லேப்டாப் மற்றும் செல்போன்களில் இருந்து மீட்கப்பட்டுள்ள வீடியோக்கள் மற்றும் படங்களை பகிர்ந்துகொண்ட அவனது நண்பர்கள் விரைவில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனிடையே 5 நாள் காவல் முடிந்து காசியை நீதிமன்றத்தில் இன்று சிபிசிஐடி போலீசார் ஒப்படைக்கின்றனர்.20 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் புகார் தெரிவிக்கும் பெண்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory