» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இரு குழந்தைகளைக் கொன்று இளம்பெண் தற்கொலை : நாகர்கோவிலில் அதிர்ச்சி சம்பவம்!!

திங்கள் 2, நவம்பர் 2020 11:59:06 AM (IST)

நாகர்கோவிலில் இரு குழந்தைகளைக் கொன்று இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

நாகர்கோவில் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (31) மருந்து நிறுவன பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராசி(28) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு அட்சயா (5)அனுசுயா (3) ஆகிய 2 பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் ரஞ்சித் குமார் உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு இறந்தார். இதனால் ராசி தனது குழந்களுடன் தனியே வசித்து வந்தார். கணவர் இறநததிலிருந்து ராசி மனம் உடைந்த நிலையில் சோகத்துடன் இருந்து வந்தார். 

இந்நிலையில் இன்று காலை ராசி தனது இரு குழந்தைகளுக்கும் தூக்க மாத்திரை கொடுத்து விட்டு தானும் தூக்க மாத்திரையை சாப்பிட்டார். மேலும் ராசி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த வீட்டினர் சென்று பார்த்த போது ராசியும் அவரது குழந்தைகளும் சடலமாக கிடந்தது தெரிந்தது. இது குறித்து தகவலறிந்த நேசமணி நகர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சடலங்களை மீட்டு பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகர்கோவில் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:10:08 AM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory