» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் பொதுமக்களுக்கு இடையூரான படிகட்டுகள் அகற்றம் : மாநகராட்சி அதிரடி

வியாழன் 22, அக்டோபர் 2020 1:33:51 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சி ராமன்புதூர் சந்திப்பில் உள்ள பல கடைகளில் படிகட்டுகள் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதை மீது  பொதுமக்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்தது.மாநகராட்சி ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில் அப்பகுதிகளில் நடைபாதைகளில் அமைக்கப்பட்டுள்ள படிகட்டுகள் அனைத்தும் இடித்து அகற்றப்பட்டன.

மேலும் நாகர்கோவில் மாநகராட்சி முழுவதும் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக உள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகளின் படிக்கட்டுகள்  அமைந்து இருந்தாலோ , அல்லது கடைகளில் பொருட்களை இடையூறாக வைத்திருந்தாலோ கடையின் உரிமையாளர்கள் தாங்களாகவே அப்புறப் படுத்திக் கொள்ளவும் தவறும் பட்சத்தில் வரும் நாட்களில் மாநகராட்சி சார்பில் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். என தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory