» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி இடைத் தேர்தல்: வாக்குப்பதிவு எந்திரங்கள் கடத்தல் - அரசியல் கட்சியினர் .புகார்

வியாழன் 22, அக்டோபர் 2020 12:47:14 PM (IST)திங்கள் நகரில் வைக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை ரகசியமாக அதிகாரிகள் கடத்தியதாக அரசியல் கட்சியினர் புகார்‌ தெரிவித்துள்ளனர்.  

குமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகருக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கு அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்திற்குள் உள்ள பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வரப்பட்டு இயந்திரங்களில் ஏற்கனவே பதிவான வாக்குகளை அழிக்கும் பணி மற்றும் பழுதான இயந்திரங்களை சரிபார்க்கும் பணி நடந்தது. இந்த பணியில் திருச்சி பெல் நிறுவன பொறியாளர்கள் மற்றும் மாவட்ட அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இப்பணிகள் நடந்தன. இந்நிலையில் இங்கு இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை அதிகாரிகள் ரகசியமாக வெளியே கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதை அறிந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும்  பல்வேறு அரசியல் கட்சியினர் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த வளாகத்தை  முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து இரணியல் போலீசார் அரசியல் கட்சிகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory