» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய காவலர் தினம் : வீர மரணமடைந்த போலீசாருக்கு அஞ்சலி

புதன் 21, அக்டோபர் 2020 4:12:51 PM (IST)கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய காவலர் தினத்தை முன்னிட்டு வீர மரணமடைந்த போலீசார்களின் வீரத்தை போற்றும் வகையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

காவல் துறையில் பணியாற்றி உயிர் தியாகம் செய்து வீர மரணமடைந்த போலீசார்களின் வீரத்தை போற்றும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீசாரின் வீடுகளுக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். மாவட்ட போலீஸ் எஸ்பி பத்ரி நாராயணன் வீர மரணமடைந்த காவலர்களுக்கு மாவட்ட ஆயுதபடை மைதானத்தில் உள்ள நினைவு தூணில் அஞ்சலி செலுத்தினார்.

ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் பணிபுரிந்து மறைந்த சுரேஷ்குமாருக்கு சிங்களேயேர்புரியில் உள்ள அவரது வீட்டில் சுசீந்திரம் காவல் நிலைய போலீசார் சார்பில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது. வள்ளியூர் காவல் நிலையத்தில் பணியின்போது வீர மரணம் அடைந்த பால்அருமை துரைக்கு மயிலாடி வீட்டில் வைத்து போலீஸ் துறை சார்பில் ஏடிஎஸ்பி ஈஸ்வரன், கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன், சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

1979 ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் பனவடலிசத்திரம் காவல் நிலையத்தில் பணியின் போது வீர மரணம் அடைந்த ஐயாபழம் வீடான மேட்டுகுடியிருப்பில் போலீஸ் துறை சார்பில் ஏடிஎஸ்பி ஈஸ்வரன், டிஎஸ்பி பாஸ்கரன், சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், அஞ்சுகிராமம் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன், மற்றும் போலீஸ் ஆளிநர்கள் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory