» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்

செவ்வாய் 20, அக்டோபர் 2020 4:51:07 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை குறைந்துள்ளதால் அணைகளுக்கு நீா்வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து பேச்சிப்பாறை அணையில் மறுகால் மதகுகள் திங்கள்கிழமை மூடப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடித்ததை அடுத்து அணைகளின் நீா்மட்டம் உச்ச அளவை நெருங்கியது. பெருஞ்சாணி, பேச்சிப்பாறை அணைகளில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வந்த்து. இதனிடையே, இம்மாவட்டத்தில் மழையின் தீவிரம் சற்று தணிந்துள்ள நிலையில், பெருஞ்சாணி அணையின் மறுகால் மதகுகள் சனிக்கிழமை மூடப்பட்டன.

பேச்சிப்பாறை அணையிலிருந்து விநாடிக்கு 1000 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், திங்கள்கிழமை மறுகால் மதகுகள் மூடப்பட்டது. அணையின் நீா்மட்டம் 44.90 அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசன மதகு வழியாக விநாடிக்கு 300 கனஅடி தண்ணீா் கால்வாயில் திறந்து விடப்பட்டுள்ளது.

பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 71.80 அடியாக உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 800 கனஅடி தண்ணிா் பாசனக் கால்வாகளில் திறந்து விடப்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கு தணிந்தது: பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீா் திறக்கப்பட்டதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அணையில் இருந்து தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ளதால் அருவியிலும் நீா்வரத்து குறைந்துள்ளது.மேலும், கோதையாறு, தாமிரவருணி ஆறுகளில் வெள்ளம் தணிந்துள்ளது. இதனால் ஆறுகளின் கரையோரங்களில் வசிப்போா் நிம்மதியடைந்துள்ளனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory