» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசு போக்குவரத்து ஊழியர் தற்கொலை மிரட்டல் : வைரலாகும் வீடியோ

திங்கள் 19, அக்டோபர் 2020 7:02:36 PM (IST)

கரோனா ஊரடங்கால் தற்போது குமரி மாவட்டத்தில் குறைந்தளவு அரசு பேருந்துகள் இயக்க படுகின்றன. அத்துடன் டிரைவர் மற்றும் நடத்துனர்களுக்கு போக்குவரத்து கலக்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விடுத்து வருகிறது.

இந்நிலையில் குமரி மாவட்டம் குழித்துறை அரசு பணிமனையில் பணியாற்றும் பேருந்து ஓட்டுநர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்து வாட்சப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறும்பொழுது பஸ்ஸில்  அதிக டீசல் பிடித்ததாக என்னை பணிமனையில் இருந்து பயிற்சி பள்ளிக்கு மாத்தினர். தற்போது வரை பணிமனைக்கு மாற்றாமல் பயிற்சி பள்ளியில் வைத்து பனி  வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடிக்கின்றனர். இதனால் எனக்கு தினமும் வருகை பதிவு பாதிக்கப்பட்டு சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது. இத்தகைய நடவடிக்கையால் நானும் என் குடும்பத்தினரும் கடும் மனு உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம் . இதனால் தற்கொலை செய்யும் முடிவிற்கு நான் தள்ளப்பட்டுள்ளேன் என்னை போல் பலரும் மனவேதனையில் இருந்து வருகின்றனர். அதிக டீசல் செலவு ஆகிறது என கூறி அரசு பஸ் டிரைவர்களை அதிகாரிகள் பழிவாங்கி வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசியுள்ள வீடியோ தற்போது குமாரி மாவட்டத்தில் வைரலாக பரவி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory