» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரிவிழா துவக்கம்

சனி 17, அக்டோபர் 2020 3:49:22 PM (IST)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியது. 

கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் ஒன்றான நவராத்திரி விழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு கரோனா காரணமாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி திருவிழா நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு பூஜை நடைபெற்றது. 

கொலு மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான கொலுவிற்கு அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. நவராத்திரி திருவிழா 26ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் ஒன்பதாம் திருவிழாவில் இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்திலும், நான்கு, ஐந்து, ஆறு மற்றும் எட்டாம் நாள் திருவிழாவில் இரவு 8 மணிக்கு வெள்ளிகாமதேனு வாகனத்திலும், ஏழாம் நாள் திருவிழாவில் இரவு 8 மணிக்கு இமயகிரி வாகனத்திலும் எழுந்தருளி கோயில் வலம்வருதல் நடக்கிறது.

10 ம் திருவிழாவான வரும் 26 ம் தேதி மாலை 6 மணிக்கு பரிவேட்டை நடக்கிறது. மகாதானபுரம் பரிவேட்டை மண்டபத்தில் நடக்கும் பரிவேட்டை கொரோனா காரணமாக பகவதியம்மன் கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள ஈசான மூலையில் நடக்கிறது. தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள், இரவில் வாகனப் பவனி ஆகியன நடக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory