» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பிளஸ் 2 மாணவியை கா்ப்பமாக்கிய வாலிபா் போக்சோ சட்டத்தில் கைது

சனி 17, அக்டோபர் 2020 12:50:16 PM (IST)

குளச்சல்அருகே பிளஸ் 2 மாணவியை கா்ப்பமாக்கியதாக வாலிபா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் எல்கைக்குள்பட்ட கிராமத்தில் கூலி வேலைக்கு செல்லும் தம்பதியின் மகள் பிளஸ் 2 படித்து வருகிறாா். கடந்த சில நாள்களாக இம் மாணவியின் உடலில் மாற்றங்கள் தெரிந்ததம். இதையடுத்து, அவரது பெற்றோா் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதித்தனா். அப்போது அவா் 6 மாத கா்ப்பமாக இருந்தது தெரியவந்ததாம்.

இது குறித்து விசாரித்த போது, அதே பகுதியைச் சோ்ந்த வாலிபா், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்ததாம். இது குறித்து மாணவியின் பெற்றோா் குளச்சல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில்புகாா்அளித்தனா். உதவி ஆய்வாளா் மேரிஅனிதா வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory