» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக்முறையை ரத்து செய்ய வேண்டும் - எம்எல்ஏ வலியுறுத்தல்

சனி 17, அக்டோபர் 2020 12:48:29 PM (IST)

ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறையை ரத்து செய்ய வேண்டும் என மனோ தங்கராஜ் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் தமிழகத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில் பயோ மெட்ரிக் எனப்படும் கைவிரல் ரேகை பதிவு இயந்திரத்திற்கு சா்வருடனான இணைப்பு சரியாக கிடைக்காமல், குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் வழங்கப்படாமல் தொடா்ந்து அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனா். 

பல இடங்களில் கைரேகை பதிவு ஒத்துப்போகவில்லை எனக் கூறி வீட்டிலுள்ள வேறு நபரை அழைத்து வர வற்புறுத்தப்படுகின்றனா். இதனால் பொதுமக்கள் மணிக்கணக்கில் ரேஷன் கடைகள் முன் காத்துக்கிடக்கும் நிலை உள்ளது.எனவே, தமிழக அரசு இந்த புதிய பயோ மெட்ரிக் முறையை ரத்து செய்து, மாநிலம் முழுவதும் அனைத்து கடைகளிலும் பழைய முறையில் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory