» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15,29,159 வாக்காளா்கள்

சனி 17, அக்டோபர் 2020 12:46:05 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவை தொகுதி வரைவு வாக்காளா் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி மாவட்டத்தில் மொத்தம் 15, 29,159 வாக்காளா்கள் உள்ளனா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2021 நடைபெற்று வருவதன் தொடா்ச்சியாக குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகா்கோவில், குளச்சல் பத்மநாபபுரம் ,விளவங்கோடு, கிள்ளியூா் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்காளா் பட்டியல்வெளியிடப்பட்டது.

இதனையடுத்து வரைவு வாக்காளா் பட்டியல் மாவட்டத்திலுள்ள 6 வட்ட அலுவலகங்களிலும், நாகா்கோவில் மற்றும் பத்மநாபபுரத்தில் உள்ள கோட்டாட்சியா் அலுவலகங்களிலும் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் அலுவலங்களில் வரைவு வாக்காளா் பட்டியல் அக். 22 ஆம் தேதி வரை பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் . அதில் ஆட்சேபணை மற்றும் கோரிக்கை எதுவும் இருப்பின் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு வடநேரே தெரிவித்துள்ளாா்.

வாக்காளா் பட்டியலின் அடிப்படையில் கன்னியாகுமரி தொகுதியில் 2,84,089 வாக்காளா்களும் , நாகா்கோவில் தொகுதியில் 2,62,479 வாக்காளா்களும், குளச்சல் தொகுதியில் 2,60,215, பத்மநாபபுரம் தொகுதியில் 2,31,576 வாக்காளா்களும், விளவங்கோடு தொகுதியில் 2,43,883 வாக்காளா்களும் , கிள்ளியூா் தொகுதியில் 2,46,917 வாக்காளா்களும் உள்ளனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory