» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை ரூ.3.75 கோடி இலக்கு : மாவட்ட ஆட்சியர்

வெள்ளி 16, அக்டோபர் 2020 8:42:05 PM (IST)கன்னியாகுமரி மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை ரூ.3.75 கோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகைக்கான தள்ளுபடி சிறப்பு விற்பனை துவக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேஇந்நிகழ்வில் குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை கருங்கல் வட்டார கல்வி அலுவலர் எஸ்.சந்திரமதியிடம் வழங்கி தொடங்கி வைத்தார்.

விஜாவில் அவர் பேசுகையில், இந்தியாவிலுள்ள கைத்தறி நிறுவனங்களில் முதன்மை நிறுவனமாக  கே-ஆப்டெக்ஸ் திகழ்வதற்கு நெசவாளர்களின் ஒத்துழைப்பும், வாடிக்கையாளர்களின் பேராதரவும் தான் முக்கிய காரணங்களாகும். திருநெல்வேலி மண்டலத்தில் 2019-2020 ஆண்டில் மொத்த விற்பனை ரூ.20 கோடி அளவிற்கு நடைபெற்றுள்ளது. இதில், தீபாவளி பண்டிகையின்போது மட்டும்; ரூ.11.05 கோடி அளவில் விற்பனை நடைபெற்றுள்ளது. நடப்பு ஆண்டிற்கு (2020) திருநெல்வேலி மண்டல அளவில், தீபாவளி பண்டிகைக்கு ரூ.12 கோடி விற்பனை குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூன்று விற்பனை நிலையங்களில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் 30 சதவீதம் தள்ளுபடி விலையுடன் ரூ.3.40 கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்றது. இந்த வருட தீபாவளிக்கு ரூ.3.75 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் குமரி கோ-ஆப்டெக்ஸில் கடந்த தீபாவளிக்கு ரூ.2.22 கோடி அளவிற்கு விற்பனை ஆனது. இந்த வருட தீபாவளிக்கு ரூ.2.40 கோடி விற்பனை குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டு வரும்,             30 சதவீதம் சலுகையானது, பொங்கல் பண்டிகை வரை வழங்கப்படும். இதனை, பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மங்கையர் விரும்பும் மென்பட்டுச் சேலைகள், சுபகூர்த்த பட்டு சேலைகள், ஆர்கானிக் சேலைகள், பருத்தி சேலைகள், காட்டன் சேலைகள், படுக்கை விரிப்புகள், சுடிதார் இரகங்கள், ரெடிமேட் சட்டைகள், வேட்டிகள், கைலிகள் ஆகியவை நவீன டிசைன்களில் உற்பத்தி செய்யப்பட்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த வருட தீபாவளி பண்டிகைக்காக புதிய வரவாக மதுரை காட்டன் சேலைகள், காதா சேலைகள், காதா பெட்சீட் ரகங்கள், சம்பரே பெட்சீட் ரகங்கள் மற்றும் பாலிவிஸ்கோஸ் சூட்டிங் ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும், வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், கனவு நனவு சேமிப்பு திட்டமும் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்து வாடிக்கையாளர்கள் 56 சதவீதம் கூடுதல் பயனுடன் கைத்தறி துணிகள் வாங்கி பயனடையலாம். 

தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, விதிமுறைகளுக்குட்பட்டு இரவு 8 மணி வரைக்கும் வர்த்தக நிர்வனங்கள் செயல்பட வழிவகை செய்யப்பட்டு, தொடர்ந்து நடைமுறையில் இருக்கிறது. எனவே, பொதுமக்கள் இந்த வருட தீபாவளிக்கு கோ-ஆப்டெக்ஸில் தங்களுக்கு தேவையான துணிகளை வாங்கி பயனடைய வேண்டுமென அவர்  கேட்டுக்கொண்டார்.

நடைபெற்ற நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் (திருநெல்வேலி) இசக்கிமுத்து, குமரி கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் ஆர்.ஜி.பத்மராஜ், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory