» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

எம்பவர் இந்தியா சார்பில் உலக உணவு நாள் கருத்தரங்கு

வெள்ளி 16, அக்டோபர் 2020 4:12:27 PM (IST)எம்பவர் இந்தியா சார்பில் உலக உணவு நாள் குறித்த தேசிய அளவிலான இணைய வழி கருத்தரங்கு நடத்தப்பட்டது.

தூத்துக்குடியில் எம்பவர் இந்தியா சமூக சேவை அமைப்பு மற்றும் ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி, தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு, திருவாருர் மற்றும் மக்கள் அறிவியல் மையம் ஆகியவற்றின் சார்பில் உலக உணவு நாள் குறித்த தேசிய அளவிலான இணைய வழி கருத்தரங்கு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றிய எம்பவர் இந்தியா செயல் இயக்குநர் ஆ.சங்கர் கூறியதாவது : உலக உணவு நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 16ம் நாளன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

இந்த ஆண்டு உலக உணவு தினத்தின் கருப் பொருள் ஒன்றாக வளருங்கள், ஊட்டமளியுங்கள், நிலைத்திருங்கள், எங்கள் செயல்கள் எங்கள் எதிர்காலமாகும். 1945 ஆம் ஆண்டின் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூற இந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நவம்பர் 1979 ஆம் ஆண்டின் இந்த அமைப்பின் 20 வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன் முயற்சியினால் இத் தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150 க்கும் அதிகமான நாடுகளில் உணவு உலக தினம் கொண்டாடப்படுகிறது. நீங்கள் வீணடிக்கும் ஒவ்வொரு பருக்கையும் யாரோ ஒருவரின் பசியைப் போக்கும் உணவாகும். உணவு மீதமானால் அதை உணவு வங்கி மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தானம் செய்யலாம். ஆகவே உணவை வீணடிக்காதீர்கள் என எம்பவர் சங்கர் கேட்டுக் கொண்டார்.

இக்கருத்தரங்கில் உணவு பாதுகாப்பு சட்டம் குறித்து தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர்.மாரியப்பன் மற்றும் அயோடின் உப்பின் முக்கியத்துவம் குறித்து நியூட்ரிசியன் இண்டர்நேஷனல் தமிழக திட்ட மேலாளர் சையது முகம்மது ஆகியோர் கருத்துரை வழங்கினர். 

திருவாருர் நுகர்வோர் சங்கத் தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி முதல்வர் அருட்பணி மேரி ஹில்டா, மக்கள் அறிவியல் மைய நிர்வாகிகள் முத்துசாமி, சம்பத் சாமுவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக மக்கள் அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் எழிலன் வரவேற்புரையாற்றினார். திருவாருர் நுகர்வோர் சங்க செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

இக்கருத்தரங்கில் நுகர்வோர் அமைப்பினர் மற்றும் மாணவிகள் பெருமளவில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருவாருர் நுகர்வோர் அமைப்பின் சரவணன், அகிலன் மற்றும் எம்பவர் இந்தியா மேலாளர் லலிதாம்பிகை ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.


மக்கள் கருத்து

K.ganeshan pharmacistOct 16, 2020 - 08:50:18 PM | Posted IP 173.2*****

Good.congratulations

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory