» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பாஜகவினர் முற்றுகை

வெள்ளி 16, அக்டோபர் 2020 7:50:00 AM (IST)கோவில்பட்டியில் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, பா.ஜனதாவினர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மெயின் ரோடு பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அங்குள்ள ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னரே சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை பா.ஜனதாவினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், கோட்டாட்சியர் அலுவலக அறையில் தரையில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பா.ஜ.க. நகர தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட பொதுச் செயலாளர் பாலாஜி, பொருளாளர் வெங்கடேசன் சென்னகேசவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோட்டாட்சியர் விஜயா, டிஎஸ்பி கலைக்கதிரவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் (கிழக்கு) சுதேசன், தாசில்தார் மணிகண்டன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ராஜூ மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோவில்பட்டி மெயின் ரோடு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னர் சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பா.ஜனதாவினர் கலைந்து சென்றனர்.

குளிர்பதன கிட்டங்கி

இதேபோன்று எட்டயபுரம் அருகே மேல ஈரால் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஊர் தலைவர் பாலமுருகன் தலைமையில், கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோட்டாட்சியர் விஜயாவிடம் கோரிக்கை மனு வழங்கினர். அதில், ‘மேல ஈரால் பஞ்சாயத்தில் வேளாண்மைத்துறை சார்பில், விளைபொருட்களை சேமித்து வைக்கும் வகையில் குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும். இதற்கு போதிய இடவசதியும் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.


மக்கள் கருத்து

K.ganeshan . secretary, Thoothukudi makkal vazhvathara pathukappu sangam.Oct 16, 2020 - 08:42:11 PM | Posted IP 108.1*****

Reasonable demands.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory