» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ரயில்வே வளர்ச்சிக்காக ஒரு தனிதுறையை உருவாக்க வேண்டும் : பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை

வியாழன் 15, அக்டோபர் 2020 11:11:51 AM (IST)

கேரளாவைப் போல் தமிழகத்திலும் ரயில்வே வளர்ச்சிக்காக ஒரு தனி துறையை உருவாக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

தமிழக ரயில்வே திட்டங்கள் தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம்வெளியிட்டுள்ள அறிக்கை.

1. சென்னையிலிருந்து விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை, சென்னையிலிருந்து சேலம், ஈரோடு வழியாக கோவை வரையிலும் அதிவேக புல்லட் ரயில் மணிக்கு 350 முதல் 500 கி.மீ வேகத்தில் இயக்க தமிழக அரசு சென்னை மேட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தியது போல சிறப்பு கூட்டு நிறுவனம் அமைத்து செயல்படுத்த வேண்டும். கேரளா அரசு இவ்வாறு செயல்படுத்த கூட்டு நிறுவனம் அமைத்து பணிகளை விரைவாக செய்து வருகின்றது குறிப்பிடதக்கது.

2. தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி, கன்னியாகுமரி, பொள்ளாச்சி பகுதியில் உள்ள ரயில்வே இருப்புபாதைகள் கேரளாவில் உள்ள கோட்டத்தில் உள்ளன. இந்த ரயில்வே இருப்புபாதைகளை தமிழகத்தில் உள்ள ரயில்வே கோட்டங்களில் இணைக்க தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி இந்திய யூனியன் அரசை வலியுறுத்த வேண்டும்.

3. தென்மாவட்டத்தில் புதிதாக ரயில்வே பாதைகள் அமைக்கும் திட்டத்துக்கு 50சதமானம் நிதியை கொடுத்து சிறப்பு கூட்டு நிறுவனம் அமைத்து கன்னியாகுமரியிலருந்து தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, காயல்பட்டிணம், ஆறுமுகநேரி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை, ராமநாதபுரம் வழியாக காரைகுடி வரை 462.47 கி.மீ தூரத்தில் புதிய ரயில்வே இருப்புபாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. நாங்குநேரியில் மின்சார ரயில் இஞ்சின் தொழிற்சாலை தமிழகஅரசும், இந்திய யூனியன் அரசும், தனியார் நிறுவனமும் இணைந்து சிறப்பு கூட்டு நிறுவனம் அமைத்து இந்த திட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

5. தமிழகத்தில் உள்ள ரயில்வே, விமானதுறை, வங்கித்துறை, வருமானவரிதுறை போன்ற இந்திய யூனியன் அரசுகளில் வேலைவாய்ப்புகள் அனைத்திலும் வேறுமாநிலத்தவரின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதை முறியடித்து தமிழர்களுக்கு 90 சதமானம் வேலை அதாவது தமிழ் மொழியை 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்றவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்த சட்டதிருத்தம் கொண்டு வந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

6. தமிழகத்தில் உள்ள மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்சி, போன்ற இரண்டாம் கட்ட நகரம் அல்லது மக்கள்தொகை அடர்த்தி நிறைந்த நகரங்களில் சென்னை மேட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தியது போல சிறப்பு கூட்டு நிறுவனம் அமைத்து மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

7. தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளை இணைந்து தமிழ்நாடு வங்கி என செயல்படுத்த வேண்டும். கேரளா அரசு இவ்வாறு செயல்படுத்தி வருகின்றது.

8. கேரளா அரசு கேரளாவில் உள்ள மக்களுக்காக கேரளா ஏர்வேஸ் என்ற பெயரில் விமான சேவைகள் துவங்க ஆரம்பகட்ட பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றது. இவ்வாறு தமிழகமும் தமிழ்நாடு ஏர்வேஸ் என்று விமான நிறுவனம் துவங்கி விமான சேவை முதலில் தமிழகத்துக்குள் இயக்க வேண்டும்.

9. கர்நாடக மாநிலம் தொழில்பாதுகாப்பு படை என புதிய பிரிவை துவங்கி அங்குஉள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பணிகளை செய்து வருகின்றது. தமிழகமும் இவ்வாறு தமிழ்நாடு தொழில்பாதுகாப்பு படை என துவங்கி தமிழகத்தில் உள்ள அனைத்து விமானநிலையங்களில் பாதுகாப்பு பணிகளை செய்திட வேண்டும்.

10. கேரளா அரசு ரயில்வே வளர்ச்சிதுறை என்று தனியாக பிரிவை தலமைசெயலகத்தில் செயல்படுத்தி வருகின்றது. இதைப்போல் தமிழகத்திலும் ரயில்வே வளர்ச்சிக்காக ஒரு தனிதுறையை உருவாக்க வேண்டும்.

11. தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளிலும் இருமொழிகொள்கை கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டும். மத்தியகல்விவாரிய பாடத்திட்டத்தில் நடைபெறும் தனியார் பள்ளிகள் மூன்றுமொழிகொள்கையை பின்பற்றி வருகின்றது. ஆகவே  இவ்வாறு மீறும் பள்ளிகளை அரசுஉடமையாக்கப்பட வேண்டும்.

12. தமிழ்மொழியை இந்திய யூனியனின் ஆட்சி மொழியாக அறிவித்திட சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி அதை அமுல்படுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வழியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

13. வெளிநாட்டுவாழ் தமிழர்கள் நலன் காக்க தனி துறை அமைத்து செயல்படுத்த வேண்டும்.

14. வெளிநாட்டுவாழ் தமிழர்களின் குழந்தைகள் மத்திய கல்விவாரியத்தில் படிக்கும் போது தமிழ்மொழி பயில அனுமதி மறுக்கப்படுகின்றது. ஆகவே இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

15. தமிழகத்தில் நடைபெறுத் திட்டங்களான எய்ம்ஸ், குலசேகரபட்டியம் ராக்கெட் ஏவுதளம், போன்ற திட்டஙகள் நடைமுறைபடுத்துவதில் நிலவும் குளறுபடிகள் சரிசெய்யப்பட்டு வெகுவிரைவில் இந்த திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

16.தமிழகத்தில் வேலைபார்க்கும் வடமாநிலத்தவர்கள் இங்கு வந்து ஒரு வருடகாலத்துக்குள் தமிழ் மொழி பயில வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தமிழ்மொழி பயிலாத வடமாநிலத்தவர்களுக்கு இங்கு வேலை இல்லை அதாவது எந்த ஒரு நிறுவனமும் வேலை கொடுக்க கூடாது என்று சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும்.மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory