» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் 1,52,782 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது : ஆட்சியர் தகவல்

திங்கள் 21, செப்டம்பர் 2020 11:14:39 AM (IST)

குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவமனையிலும், களபணியாளர்கள் மூலமாகவும், சோதனைச்சாவடிகள் மூலமாகவும் 1,52,782 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பு : தோவாளை பகுதியைச் சேர்ந்த 69 வயது முதியவர் ஒருவருக்கு ஒரு வாரமாக சளி  மற்றும் இருமல் இருந்துள்ளது. சுயமாக சிகிச்சை எடுத்துக்கொண்டு கொரோனா பரிசோதனையைத் தவிர்த்துள்ளார். ஒரு கட்டத்தில் மூச்சு விடுவதில் சிரமம் அதிகமாகவே அரசு மருத்துவனையில் பரிசோதனைக்காக வந்தபோது அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. 

அதற்குள் நுரையீரல் முழுவதுமாக பாதிக்கப்பட்டு அபாய கட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணத்தைத் தழுவினார். எனவே பொதுமக்கள் நோய்த் தொற்று அறிகுறிகளைக் குறித்து அஜாக்கிரதையாக இல்லாமல் உரிய நேரத்தில் அரசு மருத்துவனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு இழப்புகளைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், களபணியாளர்கள் மூலமாகவும், சோதனைச் சாவடிகள் மூலமாகவும் 152782 நபர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். தற்போது கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கோவிட் கவனிப்பு மையங்கள், தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டுத்தனிமைகளில் 732 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா நோய்த்தோற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 10840 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் கோவிட் சுகாதார மையத்திலிருந்து 65 நபர்கள் மற்றும் கோவிட் கவனிப்பு மையத்திலிருந்து 23 நபர்கள்  குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்

ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் மொத்தத்தில் இதுவரை  8653 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் 6344 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory