» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆவின் தேர்தலை முறையாக நடத்த கோரி வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

புதன் 16, செப்டம்பர் 2020 4:01:44 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தேர்தலை முறையாக வாக்காளர் பட்டியல் தயாரித்து, தாக்கல் செய்த மனுக்களை பரிசீலனை செய்து, தேர்தல் நடத்த கோரிய வழக்கில் தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

தூத்துக்குடியை சேர்ந்த ஜெயரதி மற்றும் ஸ்டெல்லா ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு : கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி அன்று தூத்துக்குடி மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் பதவி தேர்தல்காக 29 பேர் மனு தாக்கல் செய்தனர். இதில் 19 மனுக்கள் மட்டுமே ஏற்றுக் கொண்டு,10 மனுக்களை தேர்தல் அதிகாரி நிராகரித்துவிட்டார். 19 மனுக்களில் உள்ள வேட்பாளர்கள் பலர் சங்கத்தின் உறுப்பினராக இல்லை, சட்டவிரோதமாக அவர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உறுப்பினராக உள்ளவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் பட்டியலில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர்களின் பெயர்கள் இருக்கும். ஆனால் தேர்தல் அதிகாரிகள் எவ்வித முன் அறிவிப்புயின்றி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் உறுப்பினராக இல்லாதவர்களை வாக்காளர் பட்டியலில் இணைந்துள்ளனர். இது சட்ட விரோதமானது.தேர்தலை முறையாக வாக்காளர் பட்டியல் தயாரித்து ,முறையாக நடத்த கோரி உயர் அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டது.மனு மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே முறையாக வாக்காளர் பட்டியல் தயாரித்து, தாக்கல் செய்த மனுக்களை சரியாக பரிசீலனை செய்து,முறையாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்கள்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயனன்,ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது, வழக்கு குறித்து தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory