» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மீன்பிடி தொழிலாளிக்கு கத்திகுத்து : ஒருவர் கைது!

புதன் 16, செப்டம்பர் 2020 1:46:46 PM (IST)

கன்னியாகுமரி அருகே தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி அருகே ஆன்டனி தெருவை சேர்ந்த அபினேஷ் மற்றும் சகாய சாய் ஆகிய இருவரும் மீன்பிடி தொழிலாளர்கள். இவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சனை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று அபினேஷ் செல்போனில் விளையாடி கொண்டிருக்கும் போது அங்கு வந்த சகாய சாய், கொலை செய்யும் நோக்கில் கத்தியால் அபினேஷின் கழுத்து பகுதியில் குத்தினார். இதில் படுகாயமடைந்த அபினேஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரின் புகாரின் பேரில் கன்னியாகுமரி காவல் நிலைய ஆய்வாளர் ஆவுடையப்பன், சகாய சாயை கைது செய்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory