» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் படகு போக்குவரத்தை உடனே தொடங்க கலப்பை மக்கள் இயக்கத்தினர் ஆட்சியரிடம் மனு

புதன் 16, செப்டம்பர் 2020 1:28:39 PM (IST)

வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கன்னியாகுமரியில் படகு போக்குவரத்தை உடனே தொடங்க வேண்டும் என்று கலப்பை மக்கள் இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதில் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட சில சுற்றுலா தலங்களுக்கு மட்டும் இ-பாஸ் பெற்று சுற்றுலா செல்லலாம் என அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளை நம்பி கடைகள் நடத்தி வரும் வியாபாரிகள் கடந்த 5 மாதங்களாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். அவர்கள் நலன் கருதி கன்னியாகுமரிக்கும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தநிலையில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் செல்வகுமார் தலைமையில் மாவட்ட செயலாளர் ஜாண் கிறிஸ்டோபர், சட்ட ஆலோசகர் பாலகிருஷ்ணன் மற்றும் அங்குள்ள கடை வியாபாரிகள் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர்.

அந்த மனுவில், கொரோனா காரணமாக சுற்றுலாதலங்கள் திறக்காததால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளை நம்பி கடை வைத்திருக்கும் நடைபாதை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 5 மாதங்களாக கடைகளுக்கு வாடகை கொடுக்க முடியாமலும், பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் மின் கட்டணம் செலுத்த முடியாமலும் தவிக்கிறார்கள். 

எனவே தமிழகத்தில் ஊரடங்கை தற்போது தளர்த்தி இருப்பதால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளை அனுமதித்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். மேலும் அரசுக்கு வருமானம் தரக்கூடிய கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்தை உடனே தொடங்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory