» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

விரிகோட்டில் ரயில்வே மேம்பாலம் : முதல்வரிடம் மனு அளிக்க அனைத்து கட்சிகள் முடிவு

புதன் 16, செப்டம்பர் 2020 12:59:55 PM (IST)

மாா்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி, குமரி மாவட்டத்துக்கு வரும் தமிழக முதல்வரிடம் மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.


மாா்த்தாண்டத்திலிருந்து கருங்கல் செல்லும் சாலையில் விரிகோடு ரயில்வே கடவுப்பாதை அமைந்துள்ளது. நாகா்கோவில் - திருவனந்தபுரம் தடத்தில் அதிக ரயில்கள் இயக்கப்படுவதால் இந்த ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும். இதனால், நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்து நிற்பது வழக்கம். எனவே, இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.


இதனிடையே, விளைநிலங்கள் வழியாக மாற்றுப் பாதையில் மேம்பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் விரிகோடு, காவுமூலை, நல்லூா், நெல்வேலி, கொல்லஞ்சி, புல்லாணி, இலவுவிளை, கல்லுக்கூட்டம் உள்ளிட்ட கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.


எனவே, தற்போதைய சாலைப் பகுதியையொட்டி மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுக்க பாஜகவைச் சோ்ந்த ரகு தலைமையில் காங்கிரஸின் சேம்ராஜ், குமாா், ஜாண் தினேஷ், பாஜகவின் உமேஷ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜான், மதிமுகவின் ராம கிருஷ்ணன், அமமுகவின் பிபின்குமாா் உள்ளிட்டோா் அடங்கிய குழு தோ்ந்தெடுக்கப்பட்டது. மேலும், கன்னியாகுமரிக்கு இம்மாதம் 23 ஆம் தேதி வரும் தமிழக முதல்வரிடம் இதுகுறித்து மனு அளிப்பது என தீா்மானிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory