» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வங்கியில் வேலைபார்ப்பதாக பெண் டாக்டரை ஏமாற்றி திருமணம்: கணவர் உட்பட 3பேர் மீது வழக்குப் பதிவு

புதன் 16, செப்டம்பர் 2020 11:15:54 AM (IST)

தூத்துக்குடியில், வங்கியில் வேலைபார்ப்பதாக கூறி, பெண் டாக்டரை ஏமாற்றி திருமணம் செய்த கணவர் உட்பட 3பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் மகன் விஷ்னு வரதராஜ் (31), இவருக்கும் மருத்துவரான சென்னை நுங்கம்பாக்கம் அனுமன் காலனியைச் சேர்ந்த தேவிகலா (27) என்பவருக்கும் கடந்த 2016ல் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 65 பவுன் நகையும் ரூ.5.5லட்சம் ரொக்கமும் பெண் வீட்டார் வரதட்சனையாக கொடுத்துள்ளனர். 

விஷ்னு வரதராஜ் தான் ஐசிஐசிஐ வங்கியில் வேலைபார்ப்பதாக கூறியுள்ளார். திருமணத்திற்கு பின்னர் தேவிகலா தூத்துக்குடியில் டாக்டர் பணி செய்து வந்தார். இந்நிலையில், 2018-ல் விஷ்னு வரதராஜ் வங்கியில் வேலைபார்க்கவில்லை என்ற விபரம் தெரியவந்துள்ளது. இது குறித்து கேட்டதால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேலும், குழந்தை இல்லை என்று கூறி தேவிகலாவை கணவரின் குடும்பத்தினர் துன்புறுத்தி வந்தார்களாம்.

இதையடுத்து தேவி கலா கணவரை பிரிந்தார். மேலும் திருமணத்தின் போது கொடுத்த வரதட்சனையை திருப்பி கேட்டதால் விஷ்னு வரதராஜ் குடும்பத்தினர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுகுறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தேவிகலா புகார் செய்துள்ளார். அவரது புகாரின் பேரில் விஷ்னு வரதாராஜ், அவரது த்நதை மோகன்ராஜ், தாய் கதிர்காம கனி ஆகிய 3பேர் மீது சப் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

tutySep 16, 2020 - 12:49:49 PM | Posted IP 162.1*****

பல தனியார் வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் தற்காலிக பணியாளர்கள்தான் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory