» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மனநிலை பாதிக்கப்பட்டவர் மூச்சு திணறி சாவு : போலீஸ் விசாரணை

செவ்வாய் 15, செப்டம்பர் 2020 7:46:32 PM (IST)

ஈத்தாமொழி அருகே மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் மூச்சு திணறி இறந்து போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஈத்தாமொழி அருகே நங்கூரான்பிலாவிளையைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்ட சுபாஷ்(28). சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவருக்கு சம்பவத்தன்று இரவு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அவரை உடனே ஆசாரிபள்ளம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக ஈத்தாமொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory