» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வேலை நிரந்தரம் கோரி கொரோனா தடுப்பு பணி செவிலியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

செவ்வாய் 15, செப்டம்பர் 2020 6:59:48 PM (IST)


 
கொரோனா தடுப்பு பணி செவிலியர்கள் வேலை நிரந்தரம் செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். 

கொரோனா தடுப்பு பணி செவிலியர்கள் வேலை நிரந்தரம் செய்யக் கோருவது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது,  நாங்கள் கொரோனா பேரிடர் கால கட்டத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக எங்களது உயிர் மற்றும் குறைந்த ஊதியத்தையும் பொருட்படுத்தாமல் எங்களது நிரந்தர பணிகளை விட்டுவிட்டு தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணியில் தன்னார்வத்துடன் செவிலியர்கள் ஆக அரசின் கொரோனா நோய் தடுப்பு கவனிப்பு மையத்தில் பணி செய்து கொண்டிருக்கிறோம். 

இப்போது கொரோனா தடுப்பு பணிகள் நிறைவடைய போவதாக அறிகிறோம். இதனால் எங்களுக்கு வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது மேலும் முன்னாள் பார்த்த வேலைக்கும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எங்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு அல்லது அரசு உதவி பெறும் சுகாதாரம் சார்ந்த பணிகளில் எங்களை நியமிக்குமாறும், கொரோனா தடுப்பு பணியில் கொடுப்பதாக கூறிய சம்பளமும் வழங்கவில்லை.

வேலையில் இருந்தும் நிறுத்தி விட்டார்கள். இதனால் நாங்கள் ஏற்கனவே செய்த வேலைக்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளோம். எங்களுக்கு தர வேண்டிய ஊதியம் தரவும், வேலையை நிரந்தர படுத்தவும் உதவி செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory