» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மாவட்ட ஆட்சியரிடம் ரூ.1.20 லட்சம் நிவாரண நிதி : தூத்துக்குடி முதியவர் அசத்தல்!

செவ்வாய் 15, செப்டம்பர் 2020 6:13:03 PM (IST)

தூத்துக்குடியை சேர்ந்த முதியவர் ஒருவர் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.1.20 லட்சம் வழங்கியுள்ளார்.

தூத்துக்குடியை சேர்ந்த பூல் பாண்டியன் என்ற முதியவர், யாசகமாக பெற்று வந்த நிதியில், தனது உணவு செலவு போக மீதியுள்ளவற்றை பள்ளிகளுக்கு உதவி வந்தார். 

தற்போது கொரோனா ஆரம்பித்தவுடன், தன்னிடம் மக்கள் யாசகமாக வழங்கி வரும் பணத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் அதுவலகத்தில் தொடர்ந்து வழங்கி வருகிறார். ஏற்கனவே 12 முறை 1 லட்சத்து 20 ஆயிரம் வழங்கி உள்ளார். இந்த நிலையில் 13 வது முறையாக ரூபாய் 10 ஆயிரத்தை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.  முதியவரின் இந்த மனிதநேய செயல் அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory