» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினருக்கு கல்வி உதவித்தொகை : ஆட்சியர் அறிவிப்பு

செவ்வாய் 15, செப்டம்பர் 2020 12:13:17 PM (IST)

குமரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பு  அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி, எம்.பி.சி, டி.என்.சி) மாணவ / மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிவ/மிபிவ/சீம் மாணவ/மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாணவ / மாணவியர்கள் கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று புதுப்பித்தல் இனங்கள் - 10.11.2020-க்குள்ளும், புதிய இனங்களுக்கு 30.11.2020-க்குள்ளும் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண் போன்ற விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும்.

சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் 15.11.2020 ஆம் தேதியில் துவங்கும் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (Scholarship portal) புதுப்பித்தலுக்கான (Renewal) விண்ணப்பங்களை 15.12.2020 ஆம் தேதிக்கு முன்பும், 16.12.2020-ம் தேதியில் துவங்கும் புதியதிற்கான (Fresh) விண்ணப்பங்களை 31.01.2020 ஆம் தேதிக்கு முன்பும் அந்தந்த கல்வி நிறுவனங்கள் இணையதளம் மூலம் கேட்புகளை சமர்ப்பிக்க வேண்டும். அரசு இணையதளம் www.tn.gov.in/bcmbcdept யிலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது. 

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை அணுகவும் என மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory