» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சுவாமிதோப்பு பகுதியில் ஆடு திருடியவர் கைது

செவ்வாய் 15, செப்டம்பர் 2020 11:13:09 AM (IST)

சுவாமிதோப்பு, பொற்றயடி பகுதிகளில் ஆடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் திருடியவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், சுவாமிதோப்பு, பொற்றயடி பகுதிகளில் ஆடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் திருடுபோவதாக தெற்கு தாமரைக் குளம் காவல் நிலையதில் புகார் வந்தது. புகாரை விசாரித்த காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தராஜ், காவலர்கள் சேர்ந்து குற்றவாளியை தேடிவந்தனர். இந்நிலையில் இந்த திருட்டில் ஈடுபட்டது செட்டி விளையை சேர்ந்த குருசாமி என்ற ராஜா என்பதும், அவர் பல இடங்களில் ஆடு மற்றும் வீட்டு பொருட்களை திருடியதை கண்டுபிடித்தனர். உடனே அவரை கைது செய்து அவர் வசமிருந்த ஆடுகள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory