» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் காலமானார்

வெள்ளி 28, ஆகஸ்ட் 2020 7:19:10 PM (IST)

கரோனா சிகிச்சை பெற்றுவந்த கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் எம்.பி.க்கள் நிவாரணம் வழங்கி வருகின்றனர். இதன் காரணமாக சில எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.க்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார் (வயது 70) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வந்தார். இந்நிலையில் கடந்த 10-ந்தேதி வசந்தகுமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி எம்.பி. வசந்தகுமார் உயிர்பிரிந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory