» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஓய்வு பெற்ற ஆசிரியர் கொலை வழக்கு : தேடப்பட்ட முக்கிய நபர் மாதத்திற்கு பின்பு கைது!

புதன் 12, ஆகஸ்ட் 2020 6:56:19 PM (IST)

மார்த்தாண்டம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபர் 6 மாதத்திற்கு பிறகு தனிப்படை போலீசாரால் அதிரடியாக கைது செய்பப்பட்டு உன்ளார்.

மார்த்தாண்டத்தை அடுத்த உண்ணாமலைக் கடை ஆயிரம் தெங்கு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (65), ஓய்வு பெற்ற ஆசிரியர். கடந்த ஜனவரி மாதம் அந்த பகுதியில் உள்ளகுளம் பகுதியில் சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அஸ்வின் (21) உள்பட 4 பேர் அங்கு போதையில் கலாட்டா செய்து கொண்டிருந்தனர். இதை செய்வராஜ் தட்டி கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கி குளத்தில் வீசி விட்டு சென்று விட்டனர். குளத்தில் விழுந்த அவரால அவளியே வர முடியவில்லை. இதனால் செல்வராஜ் அங்கேயே இறந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். தொடர்ந்து 3 பேரை அதிரடியாக கைது செய்தனர். 

இதில் முக்கிய நபரான அஸ்வின் கேரளாவுக்கு தப்பி சென்று விட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இருப்பினும் அஸ்வின் போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் நேற்று அஸ்வின் பாறசாலையில் இருந்து ஆயிரம்தெங்கு பகுதிக்கு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அஸ்வினை மடக்கி பிடிக்க தனிப்பிரிவு போலீசார் திட்டமிட்டனர். அதன் படி சப்-இன்ஸ்பெக்டர் சிவசிங்கர், ஏட்டு ராஜமணி ஆகிய 2 பேரும் சேர்த்து அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory