» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அடுத்த முதல்வர் வேட்பாளர் எடப்பாடிதான் : தளவாய் சுந்தரம் பேட்டி!

புதன் 12, ஆகஸ்ட் 2020 6:46:27 PM (IST)

வரும் தேர்தலில் முதல் அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்தி தான் சந்திக்க முடியும் என்று தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத்தின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்று கேட்டால் எடப்பாடி பழனிச்சாமிதான் இதில் வேறு கேள்விக்கே இடமில்லை. வரும் தேர்தலில் முதல் அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்தி தான் சந்திக்க முடியும். எடப்பாடி பழனிச்சாமியை பொறுத்தவரை கரோனா விழிப்புணர்வு, ஆய்வுப் பணிகள் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றுள்ளார். எனவே அவர்தான் அடுத்த முதல்வர் வேட்பாளர். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

Jeba, QatarAug 14, 2020 - 10:46:12 AM | Posted IP 162.1*****

பேசாம திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜூ,விருதுநகர் மாவட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போன்ற அறிவாளி யாராவது ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால், நிச்சய வெற்றி!

ஆமாAug 14, 2020 - 09:12:57 AM | Posted IP 162.1*****

மக்கள் ஜெயலலிதாவுக்காக ஓட்டு போட்டார்கள், அவர் மறைவுக்கு பின் கட்சியை காப்பாற்ற ஓட்டு போடாமல் திருட்டுத்தனமாக பதவிக்கு வந்தவர் தானே.. இனி திராவிட கட்சிகள் எல்லாம் பதவி வெறி , பணவெறி திருடர்களே

ராமநாதபூபதிAug 13, 2020 - 09:45:40 AM | Posted IP 108.1*****

useless question useless answer

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory