» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் மீன் குஞ்சுகள் விற்பனைக்கு தடை: மாவட்ட ஆட்சியரிடம் மனு

புதன் 12, ஆகஸ்ட் 2020 5:46:44 PM (IST)தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் மீன் குஞ்சுகள் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

தேங்காப்பட்டணம் துறைமுக பைபர் படகு மீன்பிடி தொழிலாளர் சங்க தலைவர் சேசாரி, செயலாளர் மரிய செல்வன், பொருளாளர் ஆன்டனி சந்திரன், ஒருங்கிணைப்பாளர் சகாயராஜ், குமரி மாவட்ட மீனவர் பேரவை தலைவர் ஜோர்தான், உள்ளிட்டோர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து  கோரிக்கை மனு அளித்தனர். 

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது: தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள வளம் மீன்கள் (குஞ்சுமீன்கள்) மற்றும் சிறுகுஞ்சு கிளாத்தி மீன்களை இனயம் மண்டலத்தை சேர்ந்த சில வியாபாரிகள் இறக்குமதி செய்து அதிக லாபத்திற்கு விற்கிறார்கள். மேலும் கேரளாவில் இருந்து விசைப்படகுகளில் வளம் மீன்களை கொண்டு வந்து கோழித்தீவனத்துக்காக வெளியூர் வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறார்கள். இதனால் துறைமுகம் முழுவதும் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே குஞ்சு மீன்கள் விற்பனைக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.

தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் போலி பத்திரப்பதிவு செய்து விசைப்படகு யூனியன் தொடங்க உள்ளனர். அவ்வாறு தொடங்கப்படும் விசைப்படகு யூனியனை தடை செய்ய வேண்டும். தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் மீன் விற்பனை கூடத்தை, வியாபாரிகள் அபகரித்து அலுவலகம் போல் மேஜை, நாற்காலிகளை போட்டு இருக்கிறார்கள். இதனால் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை விற்பனை கூடத்தில் விற்க முடியாமல் துறைமுக நடைபாதையில் விற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே விற்பனை கூடத்தில் மீன் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory