» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமிரியிலிருந்து 200 கி.மீ சுற்றி செல்லும் ரயிலை ரத்து செய்க : எம்.பி.,க்கு பயணிகள் சங்கம் கோரிக்கை

புதன் 12, ஆகஸ்ட் 2020 1:07:04 PM (IST)

கன்னியாகுமியிலிருந்து 200 கி.மீ சுற்றி செல்லும் ரயிலை ரத்து செய்ய குமரி எம்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரயில்வேத்துறை கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் ஒருசில ரயில்கள் இயக்கத்தை மாற்றம் செய்து ஆணை பிறப்பித்துள்ளது இதன்படி கன்னியாகுமரி – மும்பை ஜெயந்தஜனதா ரயில் இனி கன்னியாகுமரி – பூனா வரை மட்டுமே இயங்கும். அடுத்ததாக கன்னியாகுமரி – திப்ரூகர் வாராந்திர ரயில் இனி தினசரி ரயிலாக மாற்றம் செய்யப்படுகின்றது. இதைப்போல் திருநெல்வேலி – ஜாம்நகர் வாரம் இருமுறை ரயில் வருடத்தில் ஆறுமாதம் அதாவது மழைகாலங்களில் இனி இயங்காமல் கொச்சுவேலியுடன் நிறுத்தி வைக்கப்படும்.  

இந்த மாற்றங்கள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் அறிக்கையில் கூறியுள்ளதாவது, கன்னியாகுமரிலிருந்து அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ருகர் என்ற இடத்துக்கு 2011-ம் ஆண்டு ரயில் பட்ஜெட்டில் வாராந்திர ரயில் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இந்தியாவிலேயே; 4273 கி.மீ அதிக தூரம் இயக்கப்படும் ரயில் ஆகும். இந்த ரயில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோயம்பத்தூர், சேலம் வழியாக கேரளாவில் உள்ள பயணிகளுக்காகவே இயக்கப்படுகின்றது. திருவனந்தபுரம் ரயில்நிலையத்தின் இடநெருக்கடியைச் சமாளிப்பதற்காக இந்த ரயில் நாகர்கோவிலுக்கு அனுப்பி நிறுத்திவைத்துப் இங்கு பராமரிக்கபடுகிறது என்பதைத் அறிந்து கொள்ளலாம். நெல்லையும், குமரியும் கேரளாவுக்கு ஒரு ரயில் டம்பிங் ஸ்டாண்டு மட்டுமாக பயன்படுகிறதே தவிர தமிழ்நாட்டுக்கு அது ரயில்வே நிலையமாக பயன்படுவதில்லை. இந்த ரயில்களை நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வழியாக இயக்கிவிட்டு, வேறு புதிய ரயில்களுக்கு நாகர்கோவிலிருந்து இயக்க இடமில்லாத படி செய்துவிடுகின்றனர் ரயில்வே அதிகாரிகள்.

ரயில்வேதுறை பல்வேறு ரயில்களின் வழித்தடத்தை மாற்றி அறிவித்து ஆணை பிறப்பித்துள்ளது. ஆகவே இந்த ரயிலை கன்னியாகுமரி – திப்ரூகர் ரயிலை திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக மாற்றி இயக்க வேண்டும். கன்னியாகுமரியிலிருந்து தற்போது இயக்கப்படும் திப்ரூகர் ரயில் கேரளா வழியாக சுற்றி செல்வதால் குமரி மாவட்ட பயணிகள் இந்த ரயிலில் பயணிப்பதை தவிர்கின்றனர். ஆகவே எங்கள் மாநிலத்தின் பகுதி பயணிகள் பயன்படும் வகையில் எங்கள் மாநிலத்தின் தலைநகர் வழியாக இந்த ரயிலை அதாவது விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பாக ரயில்வேத்துறைக்கு கோரிக்கை வைக்கிறோம். 

இவ்வாறு சென்னை வழியாக இயக்கும் பட்சத்தில் சுமார் 200 கி.மீக்கு குறைவான கட்டணம் செலுத்தி குறைந்த பயணநேரத்தில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நகரங்களுக்கு பயணிக்கலாம். இவ்வாறு இயக்கும் போது குமரி மாவட்ட பயணிகளுக்கு தங்கள் மாநிலத்தின் தலைநகரான சென்னைக்கு கூடுதல் ரயில்சேவை கிடைக்கும். இது மட்டும் இல்லாமல் குமரி மாவட்ட பயணிகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு செல்ல பகல்நேர ரயில் சேவையும் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களை சார்ந்த பயணிகளுக்கு வடகிழக்கு மாநிலங்களை சார்ந்த பகுதிகளுக்கு செல்ல நேரடி ரயில் சேவையும் கிடைக்கும்.  

கன்னியாகுமரி – மும்பை ரயில்:
கன்னியாகுமரியிலிருந்து கேரளா வழியாக மும்பைக்கு இயக்கப்பட்டு வந்த தினசரி ரயிலும் ரயில் புனா வரை மட்டுமே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலின் வழித்தடத்தையும் மாற்றம் செய்து திருவனந்தபுரம், எர்னாகுளம், மங்களுர், கோவா வழியாக மும்பைக்கு இயக்க வேண்டும். தற்போது கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மும்பைக்கு கொங்கன்பாதையில் எந்த ஒரு தினசரி ரயில்சேவையும் இல்லை. ஆகவே இந்த ரயிலை கொங்கன் பாதையில் இயக்க வேண்டும்.

திருநெல்வேலி – ஜாம்நகர்:
திருநெல்வேலியிருந்து கொங்கள்பாதையில் வாரம் இருமுறை இயங்கி வந்த இந்த ரயில் இனி மழைகாலங்களில் கொச்சுவேலியுடன் நிறுத்தி வைக்கப்பட்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கு மாற்று எற்பாடாக திருவனந்தபுரம் - லோக்கமான்யதிலக் நேத்திராவதி ரயிலை நாகர்கோவில் வழியாக திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இந்த ரயிலை பல வருடங்களாக நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றது.

குமரி எம்.பி உடனடி நடவடிக்கை
இந்த மூன்று ரயில்கள் வழித்தடம் மாற்றம் செய்து இயக்க கன்னியாகுமரி எம்.பி உடனடியாக தலையீட்டு இரண்டு ரயில்கள் வழிதடத்தை மாற்றம் செய்தும், ஒரு ரயிலை நீட்டிப்பு செய்ய ரயில்வே அமைச்சரை சந்தித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ரயில் மறியல் போராட்டம் செய்தாவது குமரி மாவட்ட பயணிகள் பாதிக்கும் இந்த ரயில்கள் இயக்கத்தை தடுத்த நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory